ஐ.நாவின் தீர்மானத்தால் இலங்கைக்கு அபகீர்த்தி – வெளிவிவகார அமைச்சர் அதிருப்தி!

இலங்கை தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் ஐ.நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரால் சமர்ப்பிக்கப்பட்ட புதிய தீர்மானம் தொடர்பில் சிறிலங்கா வாக்கெடுப்பைக் கோரும். இந்தத் தீர்மானம் எமது நாட்டின் கௌரவத் துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் ஒன்று என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார் .

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக் கப்பட்டுள்ள தீர்மானம் நியாயமற்றது எனவும் பொருளாதார நெருக்கடியின் போது நாட்டின் கௌரவத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் ஒன்று . இது எங்கள் அரசமைப்புக்கு எதிரானது . நாங்கள் இதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை .

குறித்த தீர்மானத்துக்கு எதிராக எங்கள் நண்பர்களை வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்வோம் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை மனித உரிமை தீர்மானத்தில் பொருளா தாரக் குற்றங்கள் என்ற சில விடயத்தை குறிப்பிட்டுள்ளனர் . பல நாடுகள் பொரு ளாதார நெருக்கடியை எதிர்கொண் டுள்ளன . மனித உரிமை பேரவை பொருளாதார நெருக்கடி குறித்து என்ன செய்கின்றது ? – என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply