யாழில் சாறத்தை தூக்கி காட்டியவருக்கு ஏற்பட்ட நிலை!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட கிராமம் ஒன்றில் , பாடசாலை செல்லும் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்படுத்திய 48 வயதுடைய நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

சிறுமியின் உறவினர்கள் ஊர்காவல்துறை போலீஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டு அமைய அருகில் வசிக்கும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு இருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.

ஊர்காவல்துறை போலீஸ் பிரதேசத்துக்குட்பட்ட கிராமம் ஒன்றில், பக்கத்து வீட்டு நபர் தனிமையில் இருந்த சிறுமிக்கு சாரத்தினை தூக்கி தனது ஆணுறுப்பினை காட்டியுள்ளார்.

இது தொடர்பில் சிறுமி தனது உறவினர்களுக்கு இந்த சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தார்.

உறவினர்கள் ஊர்காவல்துறை போலீஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டு அமைய சந்தேக நபரான பக்கத்து வீட்டு நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபர் சிறுமியின் வீட்டுக்கு மண் அள்ளுவதற்கான சவல் ஒன்றினை வாங்க சென்ற நேரம் இந்த அநாகரிகமான செயலில் ஈடுபட்டுள்ளார்.

அவரை நேற்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய பொழுது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்திரவிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply