தேயிலையின் உற்பத்தி செலவு அதிகரிப்பு

கொழும்பு, ஓக.01

நிலவும் நிதி நெருக்கடி காரணமாக இலங்கை தேயிலையின் உற்பத்தி செலவு 30 தொடக்கம் 35 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக பெருந்தோட்டத்துறையின் உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இரசாயன பசளை மீதான தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், பெருந்தோட்டங்கள் இரசாயன பாவனையை குறைத்துள்ளது.

இந்த நிலையில், உலகளாவிய ரீதியில் இரசாயன பசளைகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக தமது உற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ளதாக பெருந்தோட்டத்துறையின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பெருந்தோட்டத்துறை, இலங்கையின் அந்நிய செலாவணி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Leave a Reply