இலகு ரயில் திட்டம் இரத்து; விசேட விசாரணை ஆரம்பம்!

இலகு ரயில் திட்டம் அரசாங்கத்தினால் ஒருதலைப்பட்சமாக இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 15.7 கிலோமீற்றர் தூரத்தில் 16 நிலையங்களை உள்ளடக்கிய திட்டத்தை இரத்து செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டதுடன், இது போக்குவரத்து நெரிசலுக்கு “இலாபகரமான தீர்வு” அல்ல எனவும் தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்

Leave a Reply