பாடசாலை வகுப்பறைகளை அழகுபடுத்தும் வகுப்பறைக் கவின் நிலைப்போட்டி!

பாடசாலை வகுப்பறைகளை அழகுபடுத்தும் வகுப்பறைக் கவின் நிலைப்போட்டி வெள்ளிக்கிழமை(30) கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபர் ஏ.ஜி.எம்.றிசாத் தலைமையிலும்இ கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் அவர்களின் வழி காட்டலிடலும் இடம்பெற்றது.

கல்முனை கல்வி வலயத்தில் முதன்முதலாக நடைபெற்ற இப்போட்டி நிகழ்விற்குப் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹுதுல் நஜீம் அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும், நடுவர்களாக பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஏ.எச்.எம். பௌஸ், பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம்.ஐ. ஜாபிர், கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.எம். ஸம் ஸம் ஆகியோரும் , இச்செயற்றிட்ட இணைப்பாளர்களான ஆசிரியர்கள் ஏ.ஆர். பைறூஸ்கான், எம்.சீ. கிஜாஸ், அவர்களும், மற்றும் பிரதி அதிபர் திருமதி கபூர், பகுதித் தலைவர்களான எம்.ரீ.ஏ. முனாப், டீ.கே.எம். மௌசீன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மாணவர்களின் வினைத்திறனான புத்தாக்கச் செயற்பாடுகளும் ,நிலைபேறான ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்

Leave a Reply