
எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணியின் ஊடாக மீண்டும் போட்டியிடுவதற்கான தனது அர்ப்பணிப்பை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
பண்டாரவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய நாமல்,
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதிலும் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் ஒப்பந்தத்தை முன்னெடுப்பதிலும் வெற்றி பெற்றுள்ளதாகவும், இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது ஆதரவை வழங்கும் எனவும் தெரிவித்தார்.
இலங்கையில் இடம்பெறும் கொலைகள் மற்றும் ஏனைய குற்றச்செயல்கள் போன்ற சம்பவங்களைத் தடுப்பதுடன், நாட்டிற்குள் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்வதன் முக்கியத்துவத்தை அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
பிற செய்திகள்





