யாழ் அரியாலையில் ஐந்நூறு  குடும்பங்களுக்கு குடிநீர் வசதி!(படங்கள் இணைப்பு) 

யாழ். அரியாலை பகுதியில் குடிநீர் வசதியின்றி நீண்ட காலமாக கஷ்டப்பட்டு வந்த ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடி நீர் பெறுவதற்காக குழாய்க்கிணற்றை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பூமணி அம்மா அறக்கட்டளை நிறுவனம் வழங்கி வைத்தது.

 ஜே/96,97 கிராம சேவையாளர் பிரிவவுகளை உள்ளடக்கிய கலைவாணி சனசமூக நிலையத்தின் செயலாளர்  த.பிரவீன் அவர்கள் பூமணி அம்மா அறக்கட்களையின் இலங்கைக்கான செயலாளரும் முன்னாள் வட மாகாணசபையின் யாழ். மாவட்ட உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

குறித்த விடயத்தினை பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ், இலங்கை (ITR) பணிப்பாளருமான யாழ். தீவகம், வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த  விசுவாசம் செல்வராசா அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் இரண்டு லட்சத்து அறுபத்தி ஐந்தாயிரம் (265000.00) செலவில் அரியாலை கலைவாணி சனசமூக நிலையத்திற்கு சொந்தமான சின்னாலங்கண்டு வீதியில் உள்ள காணியில் அறக்கட்டளையால் குழாய்க்கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டது.

 இக் குடிநீர்த் திட்டத்தினை பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவர் திரு விசுவாசம் செல்வராசா அவர்கள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்து பெயர்ப் பலகையினை திரை நீக்கம் செய்து வைத்தார்.

குறித்த குடிநீர்த் திட்டத்துக்கான நிதிப் பங்களிப்பினை கனடா ரொறண்டோவைச் சேர்ந்த பூமணி அம்மா அறக்கட்டளையின் தீவிர செயற்ப்பாட்டாளரும் (ITR) வானொலி சேவையின்  அபிமானி திருமதி மோகனதாஸ் சாந்தகுமாரி தம்பதியினரின் முப்பத்தியொராம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு அவர்களின் நிதிப் பங்களிப்பில் இத்திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply