மத்திய மலைநாட்டில் பல நகரங்களில் பாவனையாளர்களுக்கு நேற்று முதல் கோதுமை மா தட்டுபாடு நிலவுகிறது.
இது பாவனையாளர்கள் கருத்து தெரிவிக்கையில் வர்த்தகர்கள் மத்திய மலைநாட்டில் பதுக்கி வைத்து கொண்டு விலை உயர்ந்த பின்னர் புதிய விலைக்கு விற்பனை செய்வதற்கு இவ்வாறு தட்டு பாட்டை உருவாக்கியுள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாவனையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் உணவாக அதிகளவில் தேவை படுவது கோதுமை மா வாகும்.
என்றும் இல்லாதவாறு கடந்த 9 மாதங்களில் கோதுமையின் விலை பன்மடங்கு அதிகரித்தது உள்ளது.
மேலும் இந்த நிலையில் விலை உயரும் பட்சத்தில் இலங்கை மக்கள் இனி கோதுமை மா மற்றும் கோதுமை மா வினால் உற்பத்தி செய்யும் அனைத்து பொருட்களையும் பெற்று கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளது.
இது குறித்து அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுத்து நிவாரணம் பெற்று கொடுக்க முன்வரவேண்டும்.
பிற செய்திகள்





