போதைவஸ்து பாவனையால் யாழின் நிலை கவலைக்கிடம்-இராமச்சந்திரன் ஆதங்கம்!

தற்போது யாழில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் வெளிநாட்டு போதைவஸ்துகள் மிகத்தீவிரமாக பரவி வருகின்றன.இதனால் வைத்தியசாலையில் போதைப் பாவனைக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது என வட மாகாண இந்து பௌத்த கலாசார பேரவையின் செயலாளர் M.T.S. இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸ் திணைக்களம் ,சுகாதாரப் பகுதியினர் என்பவற்றின் தரவுகளின்படி வடக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் போதைவஸ்துக்களை விற்பனை செய்கிறார்கள்.

பண பலம் படைத்த இளைஞர்கள் இதில் கூடுதலாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதனால் இன்று யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று நோய் போல போதைவஸ்து பரவியிருப்பது கவலைக்கிடமாக இருக்கின்றது.

போதைவஸ்து விற்பனை செய்பவர்களோ ,போதைவஸ்தினை பாவிப்பவர்களோ உங்கள் வீடுகளுக்கு அண்மையில் இருந்தால் உங்கள் பிரிவிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது இந்து பௌத்த கலாசார பேரவையின் காரியலயத்துக்கோ தகவல் வழங்கினால் அவர்களைக் கட்டுப்படுத்தி வைக்கலாம் என ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் பாடசாலை சமூகத்திற்கும்,சமூக ஆர்வலர்களுக்கும் கூறிக்கொள்கிறேன்.என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply