தேசிய காலநிலை திட்டம் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்!

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான ருவான் விஜேவர்தன ஆகியோர் தலைமையில் தேசத்தின் அபிவிருத்திக்கு தேசிய வானிலை திட்டத்தின் பங்களிப்பு தொடர்பில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
வானிலை இடர் மன்றத்தின் ஆலோசகர்களான சாரா ஜேன் அஹமட் மற்றும் மினியாட் ஃபப்பிஹா ஆகியோர் கலந்து கொண்ட இந்த கலந்துரையாடலின் போது தொடர்புடைய வரைவு ஜனாதிபதியின் செயலாளரிடம் வழங்கப்பட்டது.சுற்றுச்சூழல் அமைச்சின் முன்முயற்சியை செயற்படுத்துவது.
நீர்ப்பாசனம், விவசாயம் மற்றும் பிற தொடர்புடைய துறைகளின் தேசிய காலநிலை மூலோபாயத்தை ஆதரிக்கும் திறனை தீர்மானித்தல் மற்றும் அவ்வாறு செய்வது தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

பிற செய்திகள்

Leave a Reply