அரசு பணியாளர்களுக்கு அரை மாத சம்பளமா? அரசு விளக்கம்

கொழும்பு, ஒக். 1: ஒக்டோபர் மாதம் அரச பணியாளர்களுக்கு அரை மாத சம்பளமே வழங்கப்படும் என்று சமூக ஊடகங்களில் வெளியான செய்தியை நிதியமைச்சு மறுத்துள்ளது.

இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் அரச பணியாளர்களுக்கு அரை மாத சம்பளமே வழங்கப்படும் என்று கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், நிதியமைச்சு அதை மறுத்துள்ளது.

Leave a Reply