“நாட்டில் ஒருவேளை உண்பதற்கும் உணவில்லை”- கண்ணீர் வடிக்கும் இளம் தாய்!

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பெண்ணொருவர் கருத்து தெரிவிக்கையில்,

கண்ணில் கண்ணீரும் இதயத்தில் நெருப்பும் கட்டிக்கொண்டு இன்று வீதியில் இறங்கியிருக்கின்றோம்.அனைத்து கட்சியாளர்களும் ஏ.சி காரில் சென்று வருகிறார்கள்.

இவர்கள் எங்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் வந்து பார்த்தீர்களாக இருந்தால் எங்கள் ஒவ்வொருவரினதும் வீடுகளிலும் என்ன நிலைமை என்று கண்ணால் பர்ர்க்கக்கூடியதாக இருக்கும்.

நாங்கள் இவ்வாறு பேசுவதை நீங்கள் பார்த்து,சிரித்து விட்டு இருக்கலாம் ஆனால் அந்த சிரிப்பு நாட்டில் பற்றுகின்ற நெருப்பு. எங்கள் பிள்ளைகளுக்கு என்ன சாப்பிடுவதற்கு கொடுப்பது? எங்கள் வீடுகளில் சட்டி,பானையில் சாப்பாடு இல்லை கண்ணீர் மாத்திரமே உள்ளது.

வேலைக்குச் செல்கின்ற கணவர்மார்களுக்கு கிழமையில் ஒரு நாளுக்கு 5 லீற்றர் பெற்றோல் கொடுக்கிறார்கள்.

இந்த 5 லீற்றர் பெற்றோல் போதுமா? இத வைத்து என்ன செய்வது? வீட்டு வாடகை மின்சாரம்,தண்ணீர் கட்டணங்கள் அதிகரித்து உள்ளமையால் அதனைக்கூட செலுத்த முடியாத நிலையில் இருக்கிறோம்.

நாங்கள் பிணமாக இருந்தால் ஒன்றுமே பாவிக்காமல் இருக்கலாம் ஆனால் நாங்கள் எங்கள் பிள்ளைகள் என அனைவரும் உயிருடன் தானே இருக்கிறோம். எந்த வருமானமும் இல்லை.

உங்கள் காரிற்கு பின்னுக்கு ,முன்னுக்கு என பாதுகாப்புக்களை போட்டுக்கொண்டு போறீர்கள் .எங்கள் நிலைமைகள் ஒவ்வொரு வீட்டிற்கும் ஏறி ,இறங்கி பாருங்கள்.உங்களை நாங்கள் கல்லால் எறியப்போவதில்லை . பிள்ளைகளை வைத்திருக்கின்ற எங்கள் இதயம் கொதிக்கிறது.

நாள்தோறும் சாப்பாடு உண்ணவில்லை ,கண்ணீரினையே உண்ணுகின்றோம்.யார் ஆட்சி செய்தாலும் எங்களுக்கு பிரச்சனை இல்லை .

யார் வந்து ஒவ்வொருவரினதும் கண்ணீரை துடைக்க முயற்சி செய்கின்றீர்களோ அவர்களுக்கு பின்னாலே நாங்கள் நிற்போம் .

இதனை நாங்கள் வேலை இல்லாமல் வந்து கத்தவில்லை .ஒருத்தருடைய ஆட்சியை கவுக்கின்ற நோக்கம் எங்களுக்கு இல்லை .

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாத நிலை.ஒரு பேனாவின் விலை 40 ரூபவாக இருக்கின்றது.அனைத்து பொருட்களின் விலைகளையும் கூட்டி வைத்து இருக்கிறீர்கள்.எங்கள் வருமானத்தைக்கொண்டு எதனை வாங்குவது? தயவு செய்து எல்லோரும் சிந்தியுங்கள் .என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply