
யாழ்ப்பாணம்,ஓக் 02
யாழ்ப்பாணப் பல்கலைக்கழககலைப் பீடத்தைச் சேர்ந்தசிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப்பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய நாகரிகங்கள் துறைத் தலைவரும்,சிரேஷ்ட விரிவுரையாளருமான அருட் கலாநிதி ஜே. சி. போல் றொகான், நுண்கலைத் துறையின்சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தா. சனாதனன் ஆகியோரைப்பேராசிரியர்களாகப்பதவி உயர்த்துவதற்குப்பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியது.
பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று (01), சனிக்கிழமை காலை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமையப் பேராசிரியர் பதவி உயர்வுக்காக விண்ணப்பித்தஅருட் கலாநிதி ஜே. சி. போல் றொகான்,கலாநிதி தா. சனாதனன் ஆகியோரின்விண்ணப்பங்களை மதிப்பீடு செய்த,மூதவையினால் விதந்துரைக்கப்பட்ட துறைசார் நிபுணர்களின் மதிப்பீட்டு அறிக்கைகள், நேர்முகத் தேர்வு முடிவுகள் ஆகியன இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அவற்றின் அடிப்படையில்,கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய நாகரிகங்கள் துறைத் தலைவரும்,சிரேஷ்ட விரிவுரையாளருமான அருட் கலாநிதி ஜே. சி. போல் றொகான்கிறிஸ்தவ நாகரிகத்தில்பேராசிரியராகவும்,நுண்கலைத் துறையின்சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தா. சனாதனன் நுண்கலைத் துறையில் கலை வரலாற்று பேராசிரியராகவும் பதவிஉயர்த்தப் பட்டுள்ளனர்.





