வடக்கில் ஹெரோய்ன் பாவனை அதிகரிப்பு: அரசுக்கு கடும் கவலை! – நீலிக்கண்ணீர் வடிக்கிறார் பிரதமர்

“வடக்கு மாகாணத்தில் ஹெரோய்ன் போதைப்பொருள் பாவனை திடீரென அதிகரித்தமை மிகவும் கவலையளிக்கின்றது.” – இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விற்பனையாளர்களையும், பாதாள உலகக் குழுவினரையும் தேடிக்கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் முப்படையினர் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், வடக்கில் ஹெரோய்ன் போதைப்பொருளை விற்பனை செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும்.

முதலில் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால்தான் போதைப்பொருள் பாவனையை முடிவுக்குக் கொண்டுவர முடியும்” – என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply