நாட்டைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட் டெடுப்பதற்கு முறையான எந்தவொரு வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை. அதன் காரண மாகவே சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கால தாமதமடைகின்றது – இவ்வாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ் வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆட்சியாளர்களின் ஊழல் மோசடிச் செயற்பாடுகளே தற்போது நாடு முழுமையாக வங்குரோத்து நிலையை அடைய பிரதான காரணம்.
நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள மக்கள் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாது தீர்வு பெற்றுத்தருமாறுகோரி வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள்.
அரசாங்கத்துக்கு நாட்டில் அடிப்படை மனித உரிமை களை எவ்வாறு பாதுகாப்பது, நீதியை எவ்வாறு நிலை நாட்டுவது.
நிம்மதியாக வாழக்கூடிய ஒரு நாட்டை மக்களுக்கு எவ்வாறு பெற்றுக்கொடுப்பது என்பது தொடர்பில் எதுவித கரிசனையும் கிடையாது. இதன் காரணமாகவே சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி பிற்போடப்படுகிறது – என்றார்.
பிற செய்திகள்





