
திருத்த பணிகள் இடம்பெறும் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாம் அலகை இந்த மாத நடுப்பகுதியில் மீண்டும் தேசிய மின்கட்டமைப்பில் இணைக்க முடியும் என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் இரண்டாம் அலகின் திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இதன்காரணமாக தேசிய மின்கட்டமைப்பில் 300 மெகாவோட் மின்சாரம் குறைந்தது.
இதேவேளை, கடந்த 28ஆம் திகதி நீராவி கசிவு காரணமாக செயலிழந்த, நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்றாம் அலகு தேசிய மின்கட்டமைப்பில் நேற்று இணைக்கப்பட்டது.
இந்தநிலையில் தற்போது நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் இருந்து தேசிய மின்கட்டமைப்பில் 600 மெகாவோட் மின்சாரம் இணைக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்





