
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிலும் நோர்வூட் பொலிஸ் பிரிவிலும் நீண்ட காலமாக மின்சாரத்தை கள்ள தனமாக உபயோகத்தில் ஈடுபட்டு வந்த ஜவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்ய பட்டவர்கள் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் மூன்று பேரும் நோர்வூட் பொலிஸ் பிரிவில் இரண்டு பேரும் அடங்குவர்.
இலங்கை மின்சார சபை தலைமை காரியாலய உயர் அதிகாரிகளுக்கு கிடைக்க இரகசிய தகவல்களை தொடர்ந்து இந்த சுற்றிவளைப்பு இடம் பெற்றது.
அப்போது மஸ்கெலியா நோர்வூட் பகுதிகளில் ஜவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்க பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பட்டனர் என இலங்கை மின்சார சபை உயர் அதிகாரி தெரிவித்தார்.
பிற செய்திகள்





