அழிந்துபோகும் இலங்கையின் பண்பாட்டு சின்னங்கள்! யாழ்.பல்கலை முன்னாள் பேராசிரியர் கவலை

கிட்டத்தட்ட 2,500 ஆண்டு காலமாக எமது வாழ்வியலோடு இணைந்திருந்த பண்பாட்டு சின்னங்கள் 1970 இன் பின்னர் அழிந்து போவதற்கு காரணம் உலக மயமாக்கல், தகவல் தொழில்நுட்பம், நாடுகளுக்கிடையிலான நல்லுறவு என்பனவாகும் என யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை முன்னாள் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவித்தார்.

யாழில் இன்று உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை நிகழ்வு யாழ்.கோட்டையில் இடம்பெற்றிருந்தது.

அதில் கலந்துகொண்ட அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கால மாற்றத்திற்கு அமைய எங்களை மாற்றிக்கொவது நல்லதுதான். அதேநேரத்தில் எங்களுக்குரிய அடையாளங்களைக் கைவிட்டு புதியவற்றைத்தான் வாழ்வியல் அம்சங்களாக பார்ப்பது எங்கள் இனத்தினுடைய பாரம்பரிய அடையாளங்களை நாங்களே தொலைப்பதாக மாறுகின்றது.

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் பிரித்தானியர் இங்கிருந்து எங்களுடைய மரபுரிமை சின்னங்களைக் கொண்டு சென்றார்கள். சுதந்திரம் அடைந்ததன் பின்னர் நாமும், பிற நாட்டவரும் எங்கள் பாரம்பரிய வாழ்வியல் அம்சங்கள் பலவற்றை எடுத்து சென்றுள்ளார்கள்.

தென்னிலங்கையில் பல வரலாற்றுப் பழமை வாய்ந்த ஆலயங்களைப் போல், வட, கிழக்கு இலங்கையிலும் பௌத்த ,இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய வரலாற்றுப் பழமை வாய்ந்த தலங்கள் காணப்படுகின்றன.

ஆனால் இவை சுற்றுலாவுக்குரிய இடங்களாக பார்க்கப்படவில்லை. தற்போது திருக்கோனேஷ்வர ஆலயம் பிரச்சனைக்குரிய ஆலயமாக மாறுகின்றது. இந்த ஆலயத்தின் தொன்மையான வரலாறானது, இலங்கையின் எந்தவொரு இடத்திற்கும் கிடையாது.என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply