கட்சியிலிருந்து விலகிய உறுப்பினர்கள் மைத்திரியிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

கட்சியிலிருந்து விலகி அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் தம்மிடம் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தகவல் வெளிப்படுத்தியுள்ளார்.

கேகாலையில் இடம்பெற்ற தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர்,

கட்சி உறுப்பினர்கள் தங்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டாம் என கோரியதாக தெரிவித்துள்ளார்.

கட்சி உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை நீக்கப்படவில்லை. அவர்கள் கட்சியின் அனைத்து பதவிகளிலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த தேர்தலில் தாங்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலேயே போட்டியிடவுள்ளோம் என அவர்கள் கூறியதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply