சட்டவிரோத மது விற்பனை தொடர்பில் அறிவிக்க துரித அழைப்பு இலக்கம்

சட்டவிரோத மது விற்பனை மற்றும் விநியோகம் தொடர்பான முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்காக 1913 என்ற துரித அழைப்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.

24 மணிநேரமும் இயங்கும் இந்த துரித அழைப்பு இலக்கத்தை தொடர்புகொண்டு, சட்டவிரோத மது விற்பனை மற்றும் விநியோகம் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் வழங்க முடியும் எனவும் மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply