
உயிர்கொல்லி ஹெரோய்ன் போதைப் பொருளை உடை மையில் வைத்திருந்த சந்தேகத்தில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவனை கைது செய்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வட்டுக்கோட்டை கிழக்குப் பகுதியிலுள்ள தனது வீட்டில் ஹெரோய்னை பல்கலைக்கழக மாணவன் வைத்திருக்கிறானென பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்றுள்ளனர்.
அவரிடமிருந்து 750 மில்லி கிராம் ஹெரோய்ன் கைப்பற்றியதாகவும் சந்தேகத்தில் 22 வயதான பல்கலைக்கழக மாணவனைக் கைது செய்ததாகவும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.





