மகாத்மா காந்தியின் 153 ஆவது பிறந்ததின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று (02) இடம்பெற்றன.
யாழ். இந்தியத் துணைத்தூதர கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு கள் முன்னெடுக்கப்பட்டன.
யாழ். போதனா மருத்துவமனை வீதியிலுள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண மாவட்டச் செயலர் க.மகேசன், நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வ ரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், யாழ். மாநகர சபை பிரதி முதல்வர், மாநகர சபை ஆணையாளர் மற்றும் அரசியல் சமூகப் பிரதிநிதிகள், இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள், அகில இலங்கை காந்தி சேவா சங்கப் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது யாழ்ப்பாண மாவட்ட செயலர் க.மகேசன் ‘காந்தீயம்’ ஏட்டை வெளியிட்டு வைக்க அதனை இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.









