திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹிந்தபுர பகுதீயிலுள்ள வெற்றுக் காணியிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு மிதிவெடிகளை சேருநுவர பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த, காணியானது யுத்த காலத்தில் இரானுமுகாமாக பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காணியை துப்பரவு செய்து கொண்டிருக்கும்போது புதைக்கப்பட்டிருந்த மிதிவெடி தென்பட்டதையடுத்து காணிச் சொந்தக்காரர் சேருநுவர பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.இதனையடுத்து குறித்த இடத்திற்கு வருகைதந்த பொலிஸார் மிதிவெடியை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


பிற செய்திகள்





