இலங்கையர்களை சந்திக்கும் மன்னர் சார்லஸ்!

லண்டன், ஒக். 3: பிரித்தானிய மன்னர் சார்லஸ் தனது முதல் பொது நிகழ்வாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட தெற்காசிய சமூகத்தை சந்திக்க உள்ளார். இதில், இலங்கையர்களும் அடக்கம்.

மன்னர் சார்லஸின் பதவியேற்பின் பின்னர், இங்கிலாந்து முழுவதும் வாழும் தெற்காசிய சமூகத்தினருக்கு எடின்பர்க்கில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

இதன்போது இலங்கை உட்பட பல தெற்காசிய நாடுகளுடன் தொடர்புள்ளவர்கள் ஒன்றிணைவார்கள்.

இந்தநிகழ்வில் இங்கிலாந்து முழுவதிலுமிருந்து பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பூட்டான் மற்றும் மாலைத்தீவு பாரம்பரியத்தைச் சேர்ந்த 200-300 விருந்தினர்கள் பங்கேற்பார்கள் என பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply