ராஜபக்ச சகோதரர்கள் கலந்துரையாடல்: Zoom ஊடாக இணைந்து கொண்ட பசில்!

கொழும்பு, செப். 3: அடுத்த கட்ட காய்நகர்த்தல்கள் தொடர்பாக, ராஜபக்ச சகோதரர்கள், நாமல் ராஜபக்ச ஆகியோர் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

அமெரிக்கா சென்றுள்ள பசில் ராஜபக்ச, Zoom தொழில்நுட்பத்தின் மூலம் இந்த கலந்துரையாடலில் இணைந்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில், இழந்த செல்வாக்கை மீளப் பெறுவது தொடர்பாக ராஜபக்ச சகோதரர்கள் கலந்துரையாடியுள்ளதாகவும், மேலும், எதிர்காலத்தில் அரசாங்கத்திற்குள் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பாக முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply