நாட்டில் கொரோனா மீண்டும் தீவிரமடையும்- சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை!

நாட்டில் கொரோனாத் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை இதன் விளைவுகளை மக்கள் எதிர்நோக்க நேரிடும் என்று தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சமித கினிகே தெரிவித்தார் .

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

60 வயதைக் கடந்தவர்கள் மற்றும் நாட்பட்ட நோய் களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனாத் தொற் றுக் காரணமாக நோய் நிலைமைகள் அதிகரித்தல் மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் அதிகம் .

எதிர்வரும் டிசெம்பர் மாதத்துடன் ஏற்படக்கூடிய கால நிலை மாற்றத்தால் மீண்டும் கொரோனா வேகமாக பரவும் . இது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பாதிப்பாக அமையும் . அதனால் கொரோனாத் தடுப் பூசிகளை ஏற்றிக்கொள்ளவதில் அலட்சியம் காட்டக் கூடாது- என்றார் .

பிற செய்திகள்

Leave a Reply