
மத்திய மலைநாட்டில் கடந்த மூன்று தினங்களாக பெய்து வரும் மழையால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் மத்திய மலைநாட்டில் உள்ள அனைத்து நீர் தேக்கம்கழுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் நீர் தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்து செல்வதை காண கூடியதாக உள்ளது.மவுசாகலை கென்யோன் லக்சபான பொல்பிட்டிய நவலக்சபான விமலசுரேந்திர காசல்ரீ மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் சகல நீர் தேக்கங்களும் அதன் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.
குறிப்பாக லக்சபான பொல்பிட்டிய நவலக்சபான விமலசுரேந்திர மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்க க்களின் நீர் மட்டம் உயர்ந்து வரும் நிலையில் என் நேரத்திலும் வான் கதவுகள் திறந்து விடும் அபாயமும் உள்ளது.
இதனால் தாழ் நிலப் பகுதியில் உள்ள அனைத்து மக்களையும் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடும் காற்று காரணமாக பாரிய மரங்கள் உள்ள இடங்களில் மக்களை அவதானமாக இருக்குமாறும் பணியில் ஈடுபட்டு வரும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் இப் பகுதியில் பணி செய்ய வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ரஞ்சித் அலககோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இப் பகுதியில் அதிகளவில் பணி மூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகளை மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு ஹட்டன் போக்குவரத்து பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிற செய்திகள்





