<!–
இலங்கையில் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக ஒரு செயலணியை நியமிக்கவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்த செயலணியில் பாதுகாப்பு அமைச்சு, முப்படைகள் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு முகமைகளின் அதிகாரிகள் உள்ளடக்கப்படுவார்கள் என அமைச்சர் கூறுகிறார்.
செயலணிக்கான திட்டத்தை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






