தேசிய சபை தமிழர்களுக்கு நன்மை தராவிட்டால் வெளியேறுவோம்! மனோ கணேசன் உறுதி

அண்மையில் புத்துயிர் பெற்ற தேசிய சபை தமிழர்களுக்கு நன்மை தராவிட்டால்
அச்சபையில் இருந்து பயனில்லை உடன் வெளியேற வேண்டியதுதான், பயன் இல்லாத இடத்தில் நமக்கு என்ன வேலை என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தேசிய சபையின் அங்கத்துவத்தின் ஊடாக தமிழ் மக்களுக்கு பயன்தரக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையுமானால் அதனூடக பயணிக்கமுடியும், இல்லை என்றால் அந்த சபையில் நமக்கு என்ன வேலை அதில் இருந்து உடன் வெளியேற வேண்டியதுதான். இதுதான் உண்மை.

இது ஒரு சபை, அரங்கம், மேடை சந்தர்ப்பத்தை பயனளிக்கின்றதா என்று பார்க்க வேண்டும் உடன் நிராகரிக்க முடியாது என்பது தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடகும். சிலரை போல் உடன் நிரகாரிக்க முடியாது.

பயணித்து பார்ப்போம், சரிவரவில்லை என்றால் உடன் வெளியேற வேண்டியது தான்.
தொடர்ந்து ஏமாற முடியாது என அவர் சமூகம் செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply