ராஜபக்ஷ சார்பு நிறுவனத்துக்கு துப்பாக்கி மருந்து இறக்குமதிக்கு அனுமதி! கட்சிகள் குற்றச்சாட்டு

ராஜபக்ஷ குடும்பத்துக்கு நெருக்கமான தனியார் நிறுவனம் ஒன்றுக்கு துப்பாக்கி மருந்து இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அந்த நிறுவனம் ஏகபோக உரிமையை கட்டியெழுப்ப பாதுகாப்பு அமைச்சு வழிவகுத்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி, முன்னணி சோசலிஷக் கட்சிகள் சாடியுள்ளன.

அந்த நிறுவனத்துக்கு ஆயிரம் மெற்றிக் தொன் அமோனியம் நைதரேற்றை இறக்குமதி செய்ய பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

அந்த நிறுவனம் சொந்தமாக டொலர்களை செலவாய்ப்பு எப்படி வழங்கப்பட்டது. வேறு நிறுவனங்கள் சொந்தமாக டொலரை செலவு செய்து இதனை இறக்குமதி செய்ய தயாராக உள்ளனவா என்பதை பாதுகாப்பு அமைச்சு அறிந்ததா? இதற்காக கேள்வி கோரல்கள் இடம்பெற்றனவா என்று சோசலிஷக் கட்சியின் புபுது ஜயக்கொட கேள்வி எழுப்பினார்.

இதே குற்றச்சாட்டை ஐக்கிய மக்கள் சக்தியின் காவிந்த ஹேஷான் ஜெயவர்த் னவும் சுமத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply