
கடந்த சில மாதங்களாக யாழில் போதைப்பொருள் பாவனை மற்றும் சமூக சீரழிவு செயற்பாடுகள் மிகத் தீவிரமாக இடம்பெற்ற வருகின்றன.
இவ்வாறான நிலையில் குறித்த போதைப்பொருள் பாவனை காரணமாக கடந்த சில மாதங்களில் மட்டும் ஐந்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3லீற்றர் கசிப்பு மற்றும் 16லீற்றர் கோடாவை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 15வயதுடைய பாடசாலை மாணவன் கைதுசெய்யப்பட்டு அச்சுவேலி சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலை மாணவன் ஊர்காவற்றுரை காவல்துறைபிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்





