தோட்டத் தொழிலாளர்களின் தீபாவளி கொடுப்பனவை 15,000 ரூபாயாக அதிகரிப்பது குறித்து அரசாங்கம் கவனம்

<!–

தோட்டத் தொழிலாளர்களின் தீபாவளி கொடுப்பனவை 15,000 ரூபாயாக அதிகரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் – Athavan News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை 15,000 ரூபாயாக அதிகரிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக தேயிலை சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் கொடுப்பனவு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Leave a Reply