அரச ஊழியர்களுக்கு மேலும் அழுத்தம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்

அரச ஊழியர்களுக்கான வேதனத்தை குறைக்க அரசாங்கம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளது.

வேதன குறைப்பு தொடர்பில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அரச ஊழியர்களுக்கான வேதனம் மற்றும் ஓய்வூதியம் என்பவற்றுக்காக அரசாங்கம் மாதாந்தம் 119 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடுகிறது.

இதில் ஊழியர்களின் வேதனத்துக்காக 93 பில்லியன் ரூபாவும், ஓய்வூதியத்துக்கு 26 பில்லியன் ரூபாவும் செலவிடப்படுகிறது. அதாவது, வருடாந்தம் 1428 பில்லியன் ரூபாவினை அரச ஊழியர்களின் வேதனம் மற்று ஓய்வூதியத்துக்காக ஒதுக்குகிறது.

அதிகரித்துவரும், பணவீக்கத்துக்கு மத்தியில் ஏனையோரை போலவே அரச ஊழியர்களும் கடும் அழுத்தத்துக்கு உள்ளாகிவருகின்றனர்.

அவர்களின் வேதனங்களை குறைத்து, அவர்களை மேலும் அழுத்தத்துக்கு உள்ளாக்க அரசாங்கம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது.

எனவே, அரச ஊழியர்களின் பணியை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கத்தின் மீண்டெழும் செலவுகளில் அரச ஊழியர்களுக்கான வேதனம் மற்றும் ஓய்வூதியம் என்பன அத்தியாவசியமானது எனக் கருத்திற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply