யாழில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் வரணி வடக்கைச் சேர்ந்த கிட்டினன் தங்கலிங்கம் (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 27ம் தேதி வீட்டில் மேஜை மீது இருந்த அம்மிக் குளவி காலில் விழுந்தது.
இதன் பின்னர் 2 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் இறந்தார்.