3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது இறப்பியலுக்கான நோபல் பரிசு

2022 ஆம் ஆண்டு இறப்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி 2022-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.

அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எப். கிளாசர், அன்டன் ஜெய்லிஙர் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

குவாண்டம் தகவல் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக்காக இவர்கள் மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று 2022 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply