யாழ்ப்பாணம் பெருமாள் ஆலய தேர்த் திருவிழா இன்று

யாழ்ப்பாணம் வண்ணையம்பதி வேங்கடவரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தின் இரதோற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.

ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற மகோற்சவத் திருவிருவிழா கடந்த 26.09.2022 அன்று ஆரம்பமாகி இன்று 11வது திருவிழாவாக இரதோற்சவ திருவிழா இடம்பெற்றது.

கருவறையில் வீற்று அருள்பாலித்து விளங்கும் வேங்கடவரதராஜப்பெருமாள், சீதேவி, பூமாதேவிக்கும் விசேட அபிசேக, ஆராதனைகள் என்பன இடம்பெற்று வசந்த மண்டவத்தில் அருள்பாலித்த எம்பெருமான் சமேதராக பீடத்தில் வீற்று உள்வீதியுடாக வலம்வந்து வெளிவீதியுடாக தேரேரி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

12 நாட்களாக இடம்பெறும் மகோற்சவத்தில், மஹோற்சவத்தின் இறுதி நாளான நாளை தீர்த்தவோற்சவம் நடைபெற்று மஹோற்சவம் கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவடையும்.

இன்றைய மகோற்சவ கிரிகையினை ஆலயபிரதம குரு செ.ரமணீஸ்வரக்குருக்கள் தலைமையில் நடாத்திவைத்தார்.

இவ் மஹாற்சவத்தில் பல பாகங்களில் இருந்துபக்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply