துபாய், ஒக் 04
துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டுள்ள துபாயின் புதிய இந்து கோவில் இன்று திறக்கப்பட்டது
இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு கோவிலை திறந்து வைத்தனர்.
இந்த கோயிலானது, ஏற்கெனவே அமைந்துள்ள சிந்தி குரு தர்பார் கோயிலின் விரிவாக்கம் ஆகும். சிந்தி குரு தர்பார் கோவிலானது, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பழமையான இந்து கோவில்களில் ஒன்றாகும்.
துபாயின் புதிய கோவிலின் அடித்தளம் பிப்ரவரி 2020இல் நாட்டப்பட்டது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் பணிகள் நிறைவடைந்துள்ளன. அக்டோபர் 5 திகதி (நாளை) முதல் பொதுமக்கள் பார்வைக்காக இந்த கோயில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும்.