
இந்து மக்களால் அனுஷ்டிக்கப்படும் நவராத்திரி விரதம் 9 நாட்கள் நடைபெறும்.இந்த வருடத்துக்கான பூஜை வழிபாடுகள் நாளைய தினத்துடன் முழுமையாக நிறைவுக்கு வருகிறது.இன்று ஆயுத பூஜை என்று சொல்லப்படும் வழிபாடு இடம்பெற்றது.
இந்தப் பூஜையில் கல்வி கற்கும் மாணவர்கள் தமது கற்றல் உபகரணங்கள்,அதே போன்று வேலைக்குச் செல்வோர் தமக்குரிய உபகரணங்களை வைத்து வழிபடுவர்.
இளைஞர்கள் மத்தியில் இப்போது ஸ்மாட் போனில் கேம் விளையாடுவது மோகமாக மாறி விட்டது.
இந்த நிலையில் இன்றைய ஆயுத பூஜை வழிபாட்டில் கேம் ஒன் செய்யப்பட்ட நிலையில்,குறித்த ஸ்மாட் போன் சாமி அறையில் ஆயுத பூஜைக்காக வைத்து வழிபாடு புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.





