
கொழும்பு, ஒக். 5: நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
இது தொடர்பாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார கூறுகையில் “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, நாட்டின் பொருளாதாரத்தை மீட்க சர்வதேச ஒத்துழைப்பை பெறுவது உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் விசேடஉரை ஒன்றை நிகழ்த்த உள்ளார்” என்றார் அவர்.





