பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (05) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள சஜித் பிரேமதாச, அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருப்பின் பொது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே, ஹசாந்த குணதிலக்க மற்றும் கல்கம சிறிதம்ம தேரர் ஆகியோர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் 48 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், என்ன தவறு செய்தார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.
வசந்த முதலியை மல்வான, கலவான, நவகமுவ பிரதேசங்களுக்கு இரவு வேளைகளில் அழைத்துச் செல்வதாகவும், என்ன செய்கிறார்கள் என்ற சந்தேகம் இருப்பதாகவும் சஜித் பிரேமதாச வினவினார்.
தப்பித்து ஓட முற்பட்டதாலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறி வசந்த முதலிகே கொல்லப்பட்டார் என்றே எதிர்காலத்தில் கூறமுடியும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
பிற செய்திகள்