எரிபொருள் நிரப்பும் போது பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள் (VIDEO)

வவுனியா, ஓக..06

வவுனியா-ஹொரோவ்பதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த மோட்டார் சைக்கிளில் தீ பரவியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (06) முற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருளை செலுத்தும் போது தீ பரவியதையடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றும் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்தவர் அவ்விடத்தை விட்டு வெளியேறினர்.

எவ்வாறாயினும், அப்போது எரிபொருள் பம்பின் மறுபுறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை திடீரென அந்த இடத்திலிருந்து அகற்ற முற்பட்டுள்ளனர்.

அப்போதும் முச்சக்கரவண்டிக்கு எரிபொருள் செலுத்தப்பட்டு, எரிபொருள் குழாய் இருக்கும்போதே வாகனத்தை அவ்விடத்திலிருந்து அகற்ற முற்பட்டதால் பெரும் விபத்து ஏற்படவிருந்தது.

எனினும், விரைந்து செயற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

[embedded content]

Leave a Reply