யாழில் புகையிரத்துடன் மோதுண்டு ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

<!–

யாழில் புகையிரத்துடன் மோதுண்டு ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு! – Athavan News

யாழ்ப்பாணம் – நீராவியடி பிள்ளையார் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தபால் புகையிரதத்துடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 30 வயது மதிக்கதக்க 5 அடி உயரமும் பொது நிறம் உடையவர் என பொலிஸார் அடையாளங் கண்டுள்ளனர்.

கண்டியைச் சேர்ந்தவர் என நம்பப்படும் குறித்த உயிரிழந்த நபர், புகையிரதம் வரும்போது கையைகாட்டி புகையிரத தண்டவாளம் முன் நின்றுள்ளார் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Leave a Reply