யாழில் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: 25 இலட்சத்துக்கு அதிகமாக தண்ட பணம் அறவீடு!

யாழ். மாவட்டத்தில் வர்த்தகர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையின் போது, 25 இலட்சத்துக்கு அதிகமான தொகை தண்ட பணமாக அறவீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் 63 வர்த்தகர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையின் போதே 25 இலட்சத்து 74 ஆயிரத்து 500 ரூபாய் தண்ட பணம் அறவிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவலர்கள் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி ந,விஜிதரன் தெரிவித்துள்ளார்.

வர்த்தக நிலையங்களில் பொருட்களின் விலையினை காட்சிப்படுத்த தவறியமை, அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையினை மீறி பொருட்களினை பொதுமக்களுக்கு விற்றமை உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் விபரங்கள் இல்லாது பொருட்களை காட்சிப்படுத்தியமை மற்றும் விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் காட்சிப்படுத்தியமை, நுகர்வோரை ஏமாற்றும் நோக்கோடு பொருட்கள் மீது பொறிக்கப்பட்ட விலையினை மாற்றி புதிய விலையினை சேர்த்தமை, இலத்திரனியல் பொருட்களுக்கு குறைந்தபட்ச 6 மாத கால உத்தரவாத காலம் வழங்க தவறியமை உள்ளிட்ட காரணங்களுக்காக அவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தொடர்ச்சியாக யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர்கள் அலுவலர்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களினால் தேடுதல்கள் மற்றும் கண்காணிப்பு விஜயங்கள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் விதமாக செயற்படும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ன நடவடிக்கை எடுக்கப்படுவுள்ளது

Leave a Reply