வடக்கு கிழக்கு பிராந்தியங்களில் வசிக்கும் வறிய மக்களின் சமூர்த்தி முத்திரைகள் நானாவித காரணங்களுக்காக நிறுத்தப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனூப பஸ்குவெல்,

மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தவரை 63 வீதமானவர்களுக்கும், திருகோணமலை மாவட்டத்தில் 55 வீதமான குடும்பங்களுக்கும், யாழ்ப்பாணத்தில் 53 வீதமும், கிளிநொச்சியில் 69 வீதமும், சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்தந்த மாவட்டங்களில் நிலவும் வறுமை நிலையை கருத்தில்கொண்டு குறிப்பிட்ட அளவில் சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. அரசியல் தலையீடுகள் இன்றியே குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதனிடையே, சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளுக்கான வெற்றிடங்களை நிரப்ப வேண்டிய தேவையும் உள்ளது என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்





