நாளை முதல் மூடப்படவுள்ள ரயில் பாதை!

களனிவெளி ரயில் பாதையின் பராமரிப்பு பணிகள் காரணமாக கொஸ்கம முதல் அவிசாவளை வரையிலான ரயில் பாதை நாளை (07) இரவு 8.30 மணி முதல் 10 ஆம் திகதி காலை 6.00 மணி வரை மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், கொழும்பு கோட்டையில் இருந்து கொஸ்கம வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் குறித்த பாதையில் புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வழித்தடத்தில் தினமும் ஒன்பது ரயில்கள் இயக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply