திருகோணமலை ,குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் ஏ. பி. முபாறக் வேண்டுகோளின் பேரில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தலைமையில் பாரளுமன்ற கட்டிடத் தொகுதியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று (06) பிரதமர் திணேஷ் குணவர்தனவை அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
இச்சந்திப்பில் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.ஏ.சி.எம்.நஸார், ஏ.ஆர்.முஜிப் றகுமான் மற்றும் தவிசாளரின் விசேட ஆலோசகரும் ஜம்மியாவின் உபதலைவருமான அஸ்ஸெய்ஹ் எம்.சலாகுதின்(மௌலவி) ஆகியோர் பங்கேற்றனர்.
இதன் போது மிக முக்கியமான விடயங்கள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
குச்சவெளி பிரதேச எல்லைக்குள் அதிகளவான காணிகளை தொல்பொருள் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டதை இரத்து செய்து தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
,விவசாய காணிகள் துப்பரவு செய்வதற்கும் வன இலாகாவால் இடப்பட்ட எல்லை கற்களை அகற்றுவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
உபபிரதேச செயலகம் புல்மோட்டையில் இயக்குவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
புல்மோட்டையில் சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு உரிய இயந்திரங்களை பொருத்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
குச்சவெளி பிரதேச சபையை நகரசபையாக தரமுயர்த்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.,மிகவும் முக்கியமான விடயமாக பிரதேச சபையில் கடைமையாற்றும் அமைய, பதில் கடமை ஊழியர்களை நிரந்தரமாக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
பிற செய்திகள்





