வெட்டுக்காயங்களுடன் ஒருவர் சடலம் மீட்பு!

நாவுல காவல்துறை பிரிவிற்குட்பட்ட லேனமிய பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்குள்ளிருந்து வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்டுள்ள சடலம் காவல் துறையினரால் வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

38 வயதுடைய நபர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதோடு மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply