
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கொதிநீர் பீப்பாய் ஒன்றில் வீழ்ந்து கைதி ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நேற்று மாலையில் இடம்பெற்றதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொதிநீர் பீப்பாயில் விழுந்தமையினால் பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் அங்குனுகொலபெலஸ்ஸ காவல் துறையினர் மற்றும் சிறைச்சாலை திணைக்களம் உத்தியோகத்தர்கள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிற செய்திகள்

