சலங்கன்டி மக்கள் கூடும் மண்டபத்தில் திருட்டு!

ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள சலங்கன்டி பகுதியில் உள்ள மக்கள் கூடும் மண்டபத்தில் கழிவு அறைகளில் உள்ள உபகரணங்கள் களவாடிய நால்வர் ஹட்டன் பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த மண்டபத்தில் சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் பெறுமதியான கழிவு அறைகளின் உபகரணங்கள் திருடப்பட்டுள்ளன என ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்யப்பட்ட நிலையில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது பட்டுள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் நிலைய அதிகாரி கண்ணன் மற்றும் சார்ஜன்ட் பிரியந்த உட்பட பொலிசார் இவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply