இருட்டில் எந்த டீலும் வேண்டாம்: வெளிப்படையாக இங்கே கூறுங்கள்- சபையில் சஜித் கோரிக்கை!

இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கருத்து தெரிவிக்கையில்:

ஜனாதிபதி நேற்று விசேட உரை ஒன்றை நிகழ்த்தி இருந்தார்.அதில் ஐ.எம்.எப் உடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் தொடர்பில் மந்தமான பதில் ஒன்றை கூறி இருந்தார்.இதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

இப்படித்தான் இரவோடு இரவாக முன்னாள் ஜனாதிபதி கோட்டா பல ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டார்.இன்று நாடு நாசமாக போய்விட்டது.

ஆகவே சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம்,கிளப் களுடன் மேற்கொள்ளும் ஒப்பந்தம்,யார் யார் எங்கே ஒப்பந்தம் செய்தார்கள்,நோக்கம் என்ன உள்ளிட்ட அனைத்து விடயங்களும் இங்கே வெளிப்படுத்தப்பட வேண்டும்.

ஒரு கடனை பெறுவதற்காக ,பொருளாதாரத்தை சுருக்கி,மீண்டும் ஒரு கடனை வாங்கி ,அதற்கும் இன்னுமொரு கடன் வாங்கி நாட்டை நாசமாக்க வேண்டாம்.இப்படி ஒரு விடயங்களையும் ஜனாதிபதி நேற்று குறிப்பிட விலை என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply